Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சின்ன தண்ணி பிரச்சனை…. அதுக்குனு இப்படியாடா பண்ணுவ…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தனது வீட்டில் குடிநீர் வராத கோபத்தில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புலிவந்தி பகுதியில் பாலமுருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அவரிடம் குடிநீர் தொட்டியில் ஏறிக்கொண்டு என்ன செய்கிறாய் என்று வினவியுள்ளனர். அதற்கு பாலமுருகன் தனது வீட்டில் குடிநீர் வராததால் இந்த தொட்டியில் விஷம் கலந்து உள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக இச்சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசாருக்கும், செஞ்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீரானது உடனடியாக நிறுத்தப்பட்டது.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தொட்டியில் உள்ள நீரை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். அதோடு தேக்கி வைக்கப்பட்டிருந்த அந்த குடிநீரை வெளியேற்றிய பின் அந்த குடிநீர் தொட்டியானது சுத்திகரிக்கப்பட்டது. அதன்பின் அந்த தொட்டியில் புதிதாக குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டது. இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி தமிழ்வாணன் என்பவர் அனந்தபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குடிநீரில் விஷம் கலந்த குற்றத்திற்காக பாலமுருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |