Categories
அரசியல் மாநில செய்திகள்

யப்பாடி..! இவ்வளவு கூட்டமா ? சந்தோஷமா இருக்கு மக்களே… OPS மாவட்டத்தில் வியந்த ஸ்டாலின் …!!

கிராம சபை கூட்டத்தால் நாம் பல தேர்தல்களில் வென்றுள்ளோம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம் – போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, இப்போது இந்த கிராம சபைக் கூட்டத்தை தொடங்கப் போகிறோம். மகிழ்ச்சியாக, பூரிப்பாக, வந்திருக்கும் உங்களையெல்லாம் மாவட்டக் கழகத்தின் சார்பிலும், தலைமைக் கழகத்தின் சார்பிலும் வருக… வருக… வருக என இன்முகத்தோடு வரவேற்க விரும்புகிறேன்.

இங்கு மகளிர் தான் அதிகமாக இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் குறைவாகத் தான் இருக்கிறார்கள். உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் சுற்றி நின்று கொண்டிருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு. அதுபோல எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.தங்கள் இல்ல நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உணர்வோடு, எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு வந்திருக்கும் உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

இந்த அரண்மனை புதூர் ஊராட்சியில் மிகவும் சிறப்பாக இந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதில் நானும் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.இது கிராம சபைக் கூட்டமா அல்லது கிராம சபையின் பொதுக்கூட்டமா அல்லது கிராம சபை மாநாடா அல்லது மகளிர் அணி மாநாடா என்று சொல்லும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, நாம் சந்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்து இருக்கும் நம்முடைய கழக நிர்வாகிகளுக்கு, முன்னோடிகளுக்கு எல்லாம் மீண்டும் என்னுடைய வணக்கத்தை சொல்லிக் கொள்கிறேன். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த கிராம சபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்தோம். மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர்ச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அனைவரையும் அழைத்து சென்னை அண்ணா அறிவாலய கலைஞர் அரங்க கூட்டத்தில் முடிவெடுத்தோம்.

ஏற்கனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினோம். 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று முடிவு செய்து நடத்தி முடித்தோம். அதனுடைய பலன், அந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி நமக்கு கிடைத்தது. மிகவும் பெருமையாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவிலேயே நம்முடைய கட்சி தான் நாடாளுமன்றத்தில் 3வது இடத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட வெற்றி கிடைத்ததற்கு காரணம் நீங்கள் தான்.

அதற்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரைக்கும் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள். அக்கிரமம் செய்வார்கள், அநியாயம் செய்வார்கள், அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மீறி உள்ளாட்சித் தேர்தலில் நாம் 70% இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்கு காரணம் நிச்சயமாக, உறுதியாக மக்கள் தான் என முக.ஸ்டாலின் கூறினார்.

Categories

Tech |