தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசாங்கத்தின் ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் உள்ளார். பரத் அவரது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அவரது தந்தை இப்போது வாங்கி தர முடியாது எனவும், ஓய்வுபெற்ற இரண்டு மாதம் கழித்து வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் பரத்குமார் ஆனது அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டு கொண்டு நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பரத்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பரத்குமாரின் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச் சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.