Categories
லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ லேகியம்… தயாரிப்பது எப்படி?…!!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவ லேகியம் எப்படி தயாரித்துக் கொடுப்பது என்பது பற்றி இதில் பார்க்கலாம் வாருங்கள்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது இன்றியமையாத மகிழ்ச்சியை அளிக்கும். அவ்வாறு தாய்மை அடையும் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப சூட்டை குறைப்பதற்கு ஒரு இயற்கையான லேகியம் தயாரிப்பது எப்படி என்பது தெரிந்து கொள்ளுங்கள். சுக்கு, கொத்துமல்லி, பனை சர்க்கரை, கதகுப்பை நெய் சேர்த்த பிரசவ லேகியம் 7 மாத கர்ப்பம் முதல் குழந்தையின் ஒரு வயது வரை தாய்க்குத் தருவது வழக்கம். இதன் மூலம் கர்ப்பச் சூடு குறையும், இயற்கையான இரும்பு மற்றும் கால்ஷியம் சத்தும் கிடைக்கிறது. இந்த லேகியம் எப்படி செய்வது எனக் காணலாம்.

தேவையான பொருட்கள்:

சுக்கு – 2 அல்லது 3 துண்டுகள்
சித்தரத்தை – 2 துண்டுகள்
கண்டந்திப்பிலி – 1 துண்டு,
அரிசி திப்பிலி – சிறிதளவு
ஏல அரிசி – சிறிதளவு
கசகசா – 2 டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
ஓமம் – 2 டீஸ்பூன்
கிராம்பு – 10,
பட்டை – 1/2 துண்டு,
வசம்பு – 2 துண்டு,
மிளகு – 50 கிராம்,
சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – 3 துண்டு,
வெல்லம் – 250 கிராம்,
சாத்துக்குடி சாறு – 1/2 கப்
நெய் – 3 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
தேன் – 3 டீஸ்பூன்

செய்முறை:

அரிசி திப்பிலி, ஏல அரிசி, கசகசா, சோம்பு, ஓமம், கிராம்பு, பட்டை, மிளகு, சீரகத்தை தனித் தனியாக வெயிலில் ஒரு நாள் முழுதும் காய வைத்து எடுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும். சுக்கு, வசம்பு, சித்தரத்தை, கண்டந்திப்பிலியை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, தனித்தனியாக பொருட்களை பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நைசாக அரைத்து, சலித்து வைக்கவும்.

அதன் பின்னர் இஞ்சியை தோல் சீவி, அரைத்து சாறை கொஞ்ச நேரம் கழித்து தெளிந்ததும், மேலாக வடித்தெடுத்து கொள்ளவும்.அத்துடன் சாத்துக்குடி சாறையும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அதில் வெல்லத்தை தூள் செய்து அதில் கொட்டவும்.
வெல்லம் கரைந்ததும் வடிக்கட்டி, திரும்ப அடுப்பில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் பொடித்து வைத்துள்ள பொடியை அதில் தூவி கட்டியில்லாமல் கிளறவும். நெய், நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.

கையில் ஒட்டாமல் அல்வா போல் வந்ததும் இறக்கி, தேனை விட்டு கிளறி ஆற விடவும். நன்கு ஆறியதும் பாட்டிலிலோ, மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்தால் மாதக்கணக்கில் கெடாமலிருக்கும்.

Categories

Tech |