Categories
கிரிக்கெட் விளையாட்டு

திடீர் தடைபோட்ட தமிழ்நாடு…! ஏக்கத்தோடு இருந்த ரசிகர்கள்…! ஏமாற்றமே மிஞ்சியது…!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறயிருக்கும்  இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில்  இந்திய அணியுடன் விளையாட உள்ளது.  வரும் பிப்ரவரி 4ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் முதலாவது போட்டி    நடைபெற உள்ளது . மேலும் கொரோனா அச்சுறுத்தலுக்கிடையே  இந்தியாவில் நடைபெயிருக்கும்  முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி என்பதால் இப்போட்டியை  கிரிக்கெட் மைதானத்தில் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் வீரர்களின் பாதுகாப்பு காரணமாக பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு  அனுமதி இல்லை. மேலும் இந்த கிரிக்கெட்  தொடரின் மற்ற போட்டிகளுக்கு பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து BCCI  முடிவு எடுக்கும்.

ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது ” என்று தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வெளியான செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |