பெண்கள் கிவி பழம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாத பொருள். அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிக அளவு சத்து நிறைந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்களை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் சத்துக்கள் நிறைய கிடைக்கும். அவ்வாறு பெண்களுக்கு கிவி பழம் பல்வேறு சத்துக்களைத் தருகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கிவி பழம் சாப்பிடுவது நல்லது. அந்தப் பழத்தில் போதுமான அளவு போலேட் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அதில் கிடைக்கும் ஊட்டச் சத்துகள் உடலுக்கு இன்றியமையாதவை. கர்ப்பிணிப் பெண்கள் கிவி பழத்தை உட்கொள்வது குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்தும்.