Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தமிழ்நாடே நோ” சரக்கடித்து விட்டு போலீசிடம்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்…!!

இளம்பெண் ஒருவர் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் வசிப்பவர் நித்து(21). இவருக்கு நிகில் என்பவருடன் திருமணமான நிலையில் இவர் திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் கம்பெனியில் ஒரு வருடமாக பயிற்சி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வருட நிறைவு விழாவை முன்னிட்டு தன்னுடைய சக நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தன்னுடைய ஜீப்பை எடுத்துக்கொண்டு அவரே ஓட்டியுள்ளார்.

கிளம்பிய சிறிது நேரத்திலேயே முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.  இது குறித்து தகவலறிந்து டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பின்னர் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அந்த பெண் மது போதையில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறியுள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் போலீசாரிடம் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் நண்பர்களிடம் போன் மூலமாக தகவல் கொடுத்து நடந்ததைக் கூறி காவல்துறையினர் வரவழைத்துள்ளனர். பின்னர் அந்த அவருடைய பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்க சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்தப் பெண் ஓட்டிவந்த காரை நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் வந்த பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |