Categories
தேசிய செய்திகள்

BREAKING: தீவிர சிகிச்சைக்கு சசிகலா தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்…!!!

சசிகலாவுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் தீவிர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்பிறகு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவரின் ஆதரவாளர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு அரசு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளார். மூன்று நாட்களுக்கு அவரை மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து சசிகலாவுக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளதாக அவரது வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் தகவல் அளித்துள்ளார். அடிக்கடி மூச்சுத் திணறலும், உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாகவும் இருந்ததால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |