இன்றைய காலகட்டத்தில் எழுத்துப்பிழைகளை கண்டறிய பெரும்பாலானோர் கூகுள் சர்ச் இஞ்சின் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் கூகுள் செயலி மூலம் அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. நமக்குத் தெரியாத அனைத்தையும் கூகுள் செயலி மூலமாக தெரிந்து கொள்கிறோம். முன்பெல்லாம் நாம் எழுதும் ஒரு வாக்கியத்தில் உள்ள எழுத்துப் பிழைகளை கண்டறிய புத்தகங்களிலோ அல்லது டிக்சனரி போன்ற அகராதிகளில் சரி பார்க்க வேண்டும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான கூகுள் சர்ச் என்ஜின் மூலம் டைப் செய்து வாக்கியங்களில் உள்ள எழுத்துப் பிழை தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.