Categories
மாநில செய்திகள்

“10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு”…. எப்போது நடைபெறும்..? அமைச்சர் அறிவிப்பு..!!

தேர்தல் தேதிகள் அறிவித்த பின்னரே பொதுத் தேர்வு தொடர்பான தேதிகள் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் தவிர பிற நாட்களில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி மாணவர்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னரே பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |