Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு…. இன்னும் இரண்டு நாட்களில்…. வெளியான அறிவிப்பு…!!

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்து 2 நாட்களில் முடிவெடுக்க்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றத. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கல்லூரிகள் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புகள் வந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்து இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் வீதம் காலை மற்றும் மாலை என்று இரண்டு வகைகளாகப் பிரித்து பாடம் நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தி கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |