அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் காலை நேரத்தில் வானம் லேசான பனி மூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டது. நாளை மறுநாள் முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.