Categories
சினிமா தமிழ் சினிமா

‘வலிமை’க்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா… அஜித் ரசிகர்கள் செய்த செயல்… இணையத்தில் செம வைரல்…!!!

‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான செயலை செய்துள்ளனர் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைப்படம் தயாராகி வருகிறது . இயக்குனர் ஹெச் வினோத் இயக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

அஜித் ரசிகர்கள் செய்த விஷயம் | Ajith fans asks valimai update in style goes viral in nets

இந்நிலையில் வலிமை படத்தின் அப்டேட்க்காக வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது . தீவிரமான அஜித் ரசிகர்கள் சிலர் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு பழனி முருகன் கோவிலுக்கு விசிட் அடித்துள்ளனர் . மேலும் இதற்காக பிரத்தியேக பேனர் அடித்து அதில் ‘வலிமைக்கு அப்டேட் கொடுக்க சொல்லு முருகா ‘ என குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |