Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோ பிடன் அரசிடம்”… இணைந்து பணியாற்ற… இம்ரான் கான் எதிர்பார்ப்பு..!!

அதிபர் சோபையுடன் அரசுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசுடன் இணைந்து செயல்பட்டு, அமைதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட எதிர்பார்ப்பில் உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ல் பாகிஸ்தான் அரசுக்கான அனைத்து விதமான பாதுகாப்பு நிதியுதவிகளையும், டிரம்ப் அரசு நிறுத்தி விட்டது. அதை மீண்டும் பெறும் முயற்சியில் இம்ரான் கான், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வர்த்தகம், பொருளாதார மேம்பாடு, காலநிலை பாதிப்புக்கு எதிரான செயல்பாடு, பொது சுகாதார மேம்பாடு, ஊழல் முறைகேட்டுக்கு எதிரான செயல்பாடு, பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது போன்வற்றில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக, இம்ரான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்கவுள்ள லாய்ட் ஆஸ்டின், ‘ஆப்கன் அமைதி பேச்சு, பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான செயல்பாடுகளில், அமெரிக்காவின் வேண்டுதலைகளை நிறைவேற்ற பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது’ என்று, சமீபத்தில் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |