2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சில வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ , இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான மினி ஏலத்தை பிப்ரவரி 11ஆம் தேதியில் நடத்துவதற்கு திட்டமிடபட்டுள்ளது. இதன்படி ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளிலும் சில வீரர்களை வெளியேற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ் மேனாக வலம் வரும் சுரேஷ் ரெய்னாவை தக்க வைத்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ், முரளி விஜய், பியூஸ் சாவ்லா போன்றோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதனால் இவர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் கடந்த தொடரில் தொடர்ச்சியாக கேதர் ஜாதவ் சொதப்பி வந்தார். அதாவது 8 போட்டிகளில் விளையாடிய அவர் 62 ரன்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களினால் கடுமையாக விமர்சனங்களை பெற்றார். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஹர்பஜன்சிங், மோனு குமார் சிங், ஷேன் வாட்சன் போன்றவர்களையும் வெளியேற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டுவைன் பிராவோ, பாப் டூ பிளசிஸ் போன்ற வெளிநாட்டுவீரர்களை தக்க வைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.