பதவி விலகிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வழக்கமான சம்பிரதாயங்களை காற்றில் பறக்க விட்டு சென்றுள்ளார்.
வழக்கமாக புதியதாக பதவி ஏற்கும் அதிபரின் மனைவிக்கு, பதவி விலகும் அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையை சுற்றி காட்டுவது வழக்கம். டீ வைப்பது வழக்கம். இந்த நடைமுறை பல ஆண்டு காலமாக அமெரிக்காவில் இருந்து வருகிறது. அதன்படி புதிய அதிபர் ஜோ பைடன் மனைவி சில்லுக்கு டீ பார்ட்டியை மெலனியா ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் பதவி விலகிய அதிபரின் மனைவி மெலனியா இதை செய்யவில்லை.
தொலைபேசி மூலம் கூட ஒரு வாழ்த்து கூறவில்லை. ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவை சேர்ந்த மெலனியா, மாடலிங் துறையில் இருந்தவர். அதிபர் டிரம்புக்கு மூன்றாவது மனைவி. வெள்ளை மாளிகையில் இருந்து வீட்டை காலி செய்து புறப்பட்ட டிரம்ப் குடும்பம், தற்போது புளோரிடா மாநிலத்தில் குடியேறியுள்ளது.