சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் 60 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.