Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘சகுந்தலம்’… படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ… யார் தெரியுமா?…!!!!

நடிகை சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே சரித்திர, புராண படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . மேலும் புராண கதையம்சம் கொண்ட படங்கள் வசூலையும் வாரி குவிகிறது . இதனால் இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியுள்ளது . அந்த வகையில் சகுந்தலை புராண கதை தமிழ் ,தெலுங்கு மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது .

சமந்தா, தேவ் மோகன்

‘சகுந்தலம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை குணசேகர் இயக்குகிறார் . இவர் ஏற்கனவே அனுஷ்கா நடிப்பில் தமிழ் , தெலுங்கு மொழிகளில் வெளியான ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கியவர் . இதையடுத்து சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது . தற்போது சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |