Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த தாதா… அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி…!

புதுச்சேரியின் பெண் தாதா எழிலரசி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

புதுச்சேரியில் பெண் தாதாவாக வலம் வருபவர் எழிலரசி. இவர் மீது கொலை,கொலை முயற்சி, கொலை மிரட்டல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் எழிலரசி மீது குண்டர் தடுப்பு சட்டம் போடுவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் முன்னிலையில் எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார்.

காலாப்பட்டு பகுதியில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.இவ்விழாவில் பாஜக துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பல்வேறு கொலைக் குற்றங்களில் தொடர்புடைய பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்தது அரசியல் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |