மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1௦ ஆம் தேதி கொள்ளுமேடு ஆர்ச் அந்தோனி நகர் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் அரவிந்த், கார்த்திக் மற்றும் குமார் ஆகிய 3 பேரை கொலை செய்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தனது மாமியாருக்கும், மச்சினிக்கும் பிரகாஷ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
எனவே 40 வயதான பிரகாஷின் மாமியாரின் தூண்டுதலின் பெயரில் தான் மூன்று பேரும் பிரகாஷை மோட்டார் சைக்கிளில் கொள்ளுமேடு பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் பிரகாஷின் மாமியாரிடம் விசாரித்தபோது அவர் தனக்கும் தனது இளைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்துக்காகவே கொலை செய்ய கூறினேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் கொலைக்கு தூண்டுதலாக இருந்த காரணத்திற்காக அவரின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.