கோவிட் தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இங்கு தான் கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தில் ததிடீரென்று எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தடுப்பு பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் இறங்கியுள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ரசெனகா இணைந்து உருவாக்கும் தடுப்பூசிகளும் இங்குதான் தயார் செய்யப்பட்டு வருகிறது. நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தடுப்பூசிகள் இங்கு தயார் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.