14 வயது சிறுமி ஒருவர் சீரழிக்கப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டிருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் சம்பவத்தன்று கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதையடுத்து சில மணி நேரம் சென்ற பிறகும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடி அடைந்துள்ளனர். அப்போது புதர்களுக்கு இடையே அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் அங்கு உயிருடன் சிறுமி புதைக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவ பரிசோதனையில் சிறுமி சீரழிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் 35 வயதான நபர் ஒருவரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணையில், அந்த 35 வயது நபர் தனியாக சிக்கிய அந்த சிறுமியை சீரழித்தது தெரியவந்துள்ளது. அவர் பின்னர் சிறுமியை தலையில் கல்லால் அடித்து, இறந்துவிட்டார் என்று நினைத்து குழிதோண்டி புதைத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.