Categories
தேசிய செய்திகள்

“மக்களை எப்படிலாம் ஏமாத்துறாங்க” தடுப்பூசி போட்டுக்கொள்வது போல்…. நடிக்கும் அதிகாரிகள்…. வைரலாகும் வீடியோ…!!

அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது போல நடிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாடு முழுவதும் ககொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சிலர் தடுப்பு ஊசி போட்டு கொண்ட பிறகு உயிரிழந்துள்ளதால் மக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது போல அதிகாரிகள் நடித்துள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.அந்த வீடியோவில் அதிகாரி ஒருவர் தடுப்பூசி போடுவதற்காக இருக்கையில் அமர்ந்துள்ளார்.

செவிலியர் வந்து ஊசி போடாமல் கையில் வைத்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு பின்பு எடுத்து விடுகிறார். பின்னர் அந்த அதிகாரி ஊசியைப் போட்டு கொண்டது போல ஒரு நடிப்பு நடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார். அடுத்து வரும் அதிகாரி அதேபோல போட்டோவிற்கு போஸ் கொடுத்துவிட்டு செல்கிறார். அதிகாரிகளின் நடிக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |