கடகம் ராசி அன்பர்களே..!
இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதற்கு சிறந்த சூழ்நிலை காணப்படும்.
இதனால் சிறப்பாக உணர்வீர்கள். இன்று உங்களுக்கு சாதகமான நிகழ்வு அமைய திட்டமிட்டு செயல்படவேண்டும். இன்று உங்களின் பணிகளில் அஜாக்கிரதை காரணமாக பணியில் தவறுகள் செய்ய நேரிடும். மேலதிகாரிகளின் மதிப்பைப்பெற கவனமாக பணியாற்ற வேண்டும். இன்று உங்களின் துணையிடம் சகஜமாக உரையாடுகிறார்கள். இதனால் உங்களின் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவீர்கள். இன்று உங்களின் குடும்பத்தில் நல்லுறவு உண்டாகும். பொருளாதார காரணத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டியதிருக்கும். பணவரவு அதிகமாக இருக்காது. நீங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவுச்செய்ய நேரிடும். யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.