Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் பழனிசாமி..!!

டெல்லியில் தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் 

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் மோடி மீண்டும் 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மிக குறுகிய நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழகதின் வறட்சி, காவிரி நீர் பிரச்சனை மற்றும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பழனிச்சாமி மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மத்திய அமைச்சர்களான அமித்ஷா, நிர்மலா சீதா ராமன், நிதின் கட்கரி ஆகியோரை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேச உள்ளார்

Categories

Tech |