கணவன் மனைவி இருவரும் போட்டி போட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியில் பூபதி தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். பூபதி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் திருமணம் நடந்த நாள் முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்கா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் பூபதி தனது வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து விடுவேன் என தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனை பார்த்ததும் அந்த விஷ பாட்டிலை வாங்கி அவரது மனைவி துர்கா அதனை குடித்து விட்டார். இதனையடுத்து பூபதி தாஸ் அந்த விஷ பாட்டிலை மீண்டும் துர்காவிடமிருந்து வாங்கி அதனை குடித்து விட்டார்.
இவ்வாறாக இருவரும் மாறி மாறி அந்த விஷத்தை குடித்ததால் மயங்கி விட்டனர். இந்நிலையில் பூபதியின் பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் துர்கா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பூபதி உயிருக்கு போராடி வரும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.