Categories
சென்னை மாவட்ட செய்திகள்

” நான் மாஸ்டர் படம் காட்டுறேன்”… அழைத்துச் சென்ற இளைஞன்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

மாஸ்டர் படம் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 17ஆம் தேதி தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருக்கும் தனது வயதான தாய்க்கு துணையாகச் தனது 13 வயது மகளை விட்டு சென்றுள்ளார். தானும் படம் பார்க்க வரேன் என்று அந்த சிறுமி அழுதுள்ளார். எனினும் வீட்டில் விட்டு விட்டு பெற்றோர் மட்டும் சென்றுள்ளனர்.. இதனை நோட்டமிட்ட பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் அச்சிறுமியிடம் தன்னிடம் மாஸ்டர் படம் இருப்பதாகவும் தான் லேப்டாப்பில் காட்டுவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தனது பாட்டியிடம் தோழியின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சிறுமி வினோத்தின் வீட்டிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு வினோத் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நீண்ட நேரம் கழித்து அச்சிறுமி வீட்டிற்கு வந்த போது பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் வினோத் மீது புகார் அளித்தனர். ஆனால் வினோத் போலீஸ் வருவதற்குள் தலைமறைவாகிவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |