தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது.
தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதற்கு தமிழக உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றியது போல தமிழகத்திலும் தடை விதிக்கும் சட்டம் இயற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து தமிழக அரசு சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டத்தை இயற்றி விட்டது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 7 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
அதோடு 10 பேர் மீது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கு பெறும் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி அதில் பங்கேற்கின்றனர் என்பது தெரியவந்ததுள்ளது. எனவே சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கவும், பெற்றோருக்கு ஏற்படும் பண இழப்பை தடுக்கவுமே சூதாட்டம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சூதாட்டத்தை ஒருபோதும் வர்த்தகமாக கருத முடியாது என்றும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் வருகின்ற 10-ஆம் தேதிக்கு இந்த விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.