Categories
தேனி மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு போர்க்கால நடவடிக்கை…. துணை முதல்வர் உறுதி …!!

தண்ணீர் பிரச்சினையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த குடிநீர் கேட்டு அதிகமான இடங்களில் மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசிடமும் , மத்திய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Image result for தானியங்கி மின்தடை மையம்

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில் , தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களின் ஆட்சியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட ஆட்சியர்கள் கோரிய நிதியை தமிழக அரசு வழங்கி உள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.

Categories

Tech |