கேரளாவில் பெற்றோருக்கு உணவு அளிக்காமல் தந்தையை பட்டினி போட்டு மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ரெஜி என்பவர் வீட்டில் தன் பெற்றோரை தனியாக ஒரு அறையில் வைத்து அழைத்துள்ளார். அதுமட்டுமன்றி பெற்றோர் இருந்த அறை முன்பு நாயை கட்டி வைத்து அவர்களை வெளியே வர விடாமல், உணவும் கொடுக்காமல் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் பெற்றோர், மகன் கொடுமைப்படுத்தியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் முதியவர் பொடியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தன் பெற்றோரை உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தி பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.