Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் நிவாரணம்… குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை… தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின திலிருந்து கடந்த 18ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் படகு மோதி விபத்து ஏற்பட்டது. அதில் கடலில் விழுந்த 4 மீனவர்கள் இரண்டு மீனவர்களின் உடல்கள் இலங்கை கடற் பகுதியில் சடலமாக கரை ஒதுங்கி உள்ளன. இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிரிழந்த புதுக்கோட்டையை சேர்ந்த நான்கு மீனவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |