காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி பரப்புரையை தொடங்க உள்ளார்.
கட்சிகளுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் மதச்சார்பின்மை என்ற ஒற்றை நேர்கோட்டில் அனைவரும் ஒன்றாக கூட்டணியில் உள்ளோம். சசிகலா விடுதலையாகி வந்தாலும் அரசியலில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. கமலஹாசனின் கட்சி ஒரு மழலை கட்சி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்தால் அதில் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார்.