தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவர், தடுப்பூசி போட்ட 18 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா என்ற கொடிய நோய் உலக நாடுகளை நாசம் செய்து வருகின்றது. இது பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டு கடந்தும், இன்னும் உலகம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும், கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 600 பேருக்கு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் மூன்றாவது நாளாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் 42 வயதான சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்டு 18 மணி நேரத்தில் அவர் நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு உத்திரபிரதேசத்தில் 46 வயது உடைய ஒரு நபர், கர்நாடகாவை சேர்ந்த ஒரு நபர் என இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தடுப்பூசியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.