நடிகர் தனுஷ் ட்விட்டரில் தனது பயோவில் ‘அசுரன் நடிகர்’ என குறிப்பிட்டிருப்பது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஈஸ்வரன்’ . இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்பு ‘நீ அழிப்பதற்கு வந்த அசுரன்னா, நா காப்பதற்கு வந்த ஈஸ்வரன்’ என்ற வசனத்தை பேசியிருந்தார் .
இந்நிலையில் நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் இதுவரை தனது பயோவில் நடிகர் என்று குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது ‘அசுரன் நடிகர்’ என மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ஈஸ்வரன் படத்தில் சிம்பு பேசிய வசனத்திற்கு தனுஷ் மறைமுக பதிலடி கொடுத்திருக்கிறார் என கூறி வருகின்றனர் . மேலும் நடிகர் தனுஷ் தனது பயோவில் அசுரன் என மாற்றியது தற்செயலா? அல்லது சிம்புவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தாரா ? என்று தனுஷ்- சிம்பு ரசிகர்கள் ட்வீட்டரில் விவாதம் செய்து வருகின்றனர் .