சசிகலா நுரையீரலில் தீவிர தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி-27 ஆம் தேதி விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து உடல்நிலை சரியாகி சிறைக்கு திரும்பிய சில மணி நேரத்தில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பதாக சிடி ஸ்கேனில் தெரியவந்துள்ளது. ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிற்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் அவரது நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.