பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திரா திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .
சினிமாவில் நடிக்கும் நடிகைகள் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். பிரியங்கா ,டிடி, ரம்யா, திவ்யா என பல தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர் . அந்த வகையில் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி நக்ஷத்திரா . ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானார் .
இவர் சில குறும்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நக்ஷத்திரா திருமணம் செய்துகொள்ள இருக்கும் மாப்பிள்ளையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .