ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஹெலிகாப்டரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 3 வீரர்களும் உயிரிழந்து விட்டனர்.
மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியூயார்க் கவர்னர் வீரர்களின் மறைவு குறித்து வேதனை தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார், அதோடு உயிரிழந்த வீரர்களின் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அந்த நகரில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என கவர்னர் தெரிவித்தார்.