Categories
உலக செய்திகள்

மனித வெடிகுண்டு…. அதிரவைக்கும் காட்சிகள்… நடந்த கொடூர சம்பவம்…. தாக்குதலின் விளைவுகள்…!!

ஈரானில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் பாப் அல் ஷர்க்கி என்ற முக்கியமான வணிக பகுதி உள்ளது. இங்கு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் பலியாகினர். இதனையடுத்து எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு இன்னும் பொறுப்பு ஏற்காத நிலையில், இது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதலாக இருக்கலாம் என்று ஈராக் ராணுவ அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். அதோடு காயமடைந்த சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த நாட்டு சுகாதாரத்துறை மந்திரி ஹசன் முகமது அல் தமிமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |