Categories
அரசியல்

15 ஆண்டுகளில்….. ரூ2,00,00,000 லாபம்….. ஈஸியா சம்பாதிக்க சூப்பர் டிப்ஸ் இதோ….!!

15 வருடத்தில் ரூ.2 கோடி  சம்பாதிப்பது எப்படி என்பது குறித்த தொகுப்பினை இப்பொது பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தொழில் முறையாக நிர்வகிக்கப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகும். பல முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தை திரட்டி அந்த நிதியை பங்குகள் மற்றும் பத்திரங்கள், குறுகியகால சந்தை பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வது ஆகும். பெரும்பாலான சிறு முதலீட்டாளர்களின் மூலம் சேகரிக்கப்படும் நிதியை ஒன்றுதிரட்டி உருவாக்கப்படுகிறது. பொதுவாக முதலீட்டு நோக்கத்தை கொண்டவர்களிடம் இருந்து மட்டுமே பணத்தை திரட்டும் ஒரு அமைப்பாக இது இருக்கிறது.

எஸ்ஐபி முதலீடு சிறந்தது:

உங்களால் இப்போதிலிருந்தே சிறிய தொகையை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் மிகப்பெரிய தொகையாக உங்களால் சம்பாதிக்க முடியும். இப்போது  உங்களுக்கு 37 வயதாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் 60 வயதில் இது 2 கோடி வரை சம்பாதிக்கும் பணமாக மாறும். மாதம் ரூபாய் முப்பதாயிரம் நாற்பதாயிரம் வரையில் உங்களால் முதலீடு செய்ய முடிந்தால் மிக எளிதாக இந்த இலக்கை அடைய முடியும். புதிதாக இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எஸ்ஐபி முதலீடு சிறந்த தீர்வாக இருக்கும்.

2 கோடி பெறுவது சாத்தியமாகுமா?

உங்களால் 15 முதல் 23 வருடங்கள் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்ய முடிந்தால் இரண்டு கோடி லாபம் என்பது சுலபமான ஒன்றுதான். 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உங்களுக்கு லாபம் கிடைத்தால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும். ஆக்சிஸ் புளூசிப் மியூச்சுவல் ஃபண்ட், டிஎஸ்பி மிட்கேப் ஃபண்ட், கனரா ரெபெகோ ஈக்விட்டி டைவெர்சிஃபைடு ஃபண்ட், எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலமாக உங்களது ஓய்வுக் காலத்தில் ரூ.2 கோடி வரையில் சம்பாதிக்கலாம். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சிறந்த லாபத்தை கொடுக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |