அண்ணாபல்கலைக்கழகம் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான ஏப்ரல்- மே செமஸ்டர் அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் பயிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு இரண்டாம் செமஸ்டர் ஏப்ரல், மே மாதங்களுக்கான செமஸ்டர் வகுப்புகள், இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் 21 வரை நடைபெறும் என்றும், ஜூலை 2ம் தேதி எழுத்துத் தேர்வு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.
இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல்-12 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி “ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும்” எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.