என் உடம்பில் பட்ட அத்தனை காயங்களுக்கும் என் மகளின் அன்பு முத்தம் மருந்தாகும் என்று புஜாரா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டார் புஜாரா. அப்போது அவர் உடலின் பல்வேறு இடங்களில் பந்தில் அடி வாங்கினார். தற்போது நாடு திரும்பிய அவர், “நான் வீட்டுக்கு வந்ததும் எனக்கு எங்கெல்லாம் அடிபட்டது அங்கெல்லாம் வருத்தம் தருவதாக என் மகள் சொல்லி இருக்கிறாள். முத்தம் காயத்தை குணப்படுத்தும் என அவள் நம்புகிறாள்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.