தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெயங்கொண்டம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இந்திரா தம்பதியினர். சண்முகம் கூலித்தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் இந்திராவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.
இதுகுறித்து இந்திராவின் தாயான தங்கம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் இந்திரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இந்திராவிற்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆவதால் வரதட்சணைக் கொடுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகின்றார்.