Categories
மாநில செய்திகள்

“இயேசு அழைக்கிறார்” பால் தினகரன் வீட்டில்…. 3 வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு…!!

மதபோதகர் பால் தினகரனின் வீட்டில் வருமானவரித்துறையினர் 3 வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதபோதனை நிகழ்ச்சியை நடத்தி வருபவர் மதபோதகர் பால்தினகரன் ஆவார். இவர் மீது வரி ஏய்ப்பு  மற்றும் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து மதபோதகரின் வீடு, அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து 3 வது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது. ஆனால் சோதனையில் என்ன சிக்கியது என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |