தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீரின் வரத்து குறைந்துள்ளது.இருப்பினும் ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் குழிப்பதால் ஆபத்து ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்து வருக்கிறது. ஆனால் இதை சிலர் பொருட்படுத்தாமல் தாமிரபரணி ஆற்றில் சென்று குளித்து வந்தனர்.
இந்நிலையில், நாணல்காடு பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய முதியவர் அழகிய பூ வேளாளர் என்பவர் இன்று ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது திடீரென வந்த வெள்ளம் அவரை அடித்து சென்றது.இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆற்றில் பல மணி நேரம் தேடியும் முதியவர் கிடைக்கவில்லை.
அதன் பிறகு சில கிலோமீட்டர் தள்ளி முதியவரின் உடல் இருப்பதை அப்பகுதி பொதுமக்கள் கண்டறிந்துள்ளனர். மழையின் காரணமாக காவிரி ஆட்சியில் குளிப்பது ஆபத்து என்று மாவட்ட நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் அதனைப் பொருட்படுத்தாமல் குளிக்கச் சென்றவரிகளில் தற்போது ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.