தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த 11 பேரும் தேவரகொண்டா மற்றும் ஹைதராபாத் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்தவர்களின் நிலை மோசமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விபத்து குறித்து தகவலறிந்த துணை காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து அவர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.