Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்கள் உங்களை கொன்றாலும் ஆச்சர்யமில்லை… விளம்பரம் செய்ய பணம் எப்படி வந்தது…? அதிகாரிகளை வறுத்தெடுத்த நீதிபதிகள்…!!

மத்திய அரசின் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை மக்கள் கொன்றாலும் அதில் ஆச்சர்யமில்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது மத்திய அரசின் பொறுப்பில்லாத அரசியல்வாதிகள் மற்றும் அரசு மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களால் கொலை செய்யப்பட்டாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது யூனியன் பிரதேசமான டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. இதனால் உருவான பொருளாதார நெருக்கடியினால் பல பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் அவர்கள் பெரும் பொருளாதார சுமையை சந்தித்து வருவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொறுப்பற்று செயல்படும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோர்களால் தான் பணியாளர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களால் அவர்கள் கொல்லப்பட்டாலும் கூட அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் டெல்லி உயர்நீதிமன்றமானது டெல்லி அரசிற்கு மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதியை இரண்டு வாரத்திற்குள் அனுப்பி பிரச்சனைகளை சரி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இதுகுறித்து நீதிபதிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது, டெல்லி அரசு மற்றும் மாநகராட்சி அரசின் மீது உச்சகட்ட வருத்ததை நாங்கள் அடைந்துள்ளோம் என்பதை சொல்ல முடியவில்லை. பணியாளர்களின் மீது உங்களுக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது. ஆனால் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உரிய பென்சன் தொகை வழங்காமல், ஏழை பணியாளர்களுக்கும் உரிய ஊதியத்தை சரிசெய்யாமல் பொறுப்பின்றி நடந்து கொண்டுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், நான்காம் நிலை ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றோர் மனுதாரரின் பட்டியலில் இருக்கின்றனர். மேலும் நீதிமன்ற அமர்வு, டெல்லி அரசிடம் கொரோனா காலகட்டங்களில் நாளிதழ்களில் பெரிய விளம்பரங்களை தவறாமல் அளிப்பதற்கு பணம் உங்களிடம் இருந்ததா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இந்திய கண்ட்ரோலர், ஆடிட்டர் ஜெனரலின் விசாரணை மற்றும் தணிக்கைக்கு கட்டளையிட்டு எச்சரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று காலங்களில் எத்தனை விளம்பரங்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்பதையும் நாங்கள் அறிய விரும்புகிறோம் . இதற்காக சிஏஜி விசாரணைக்கு உத்தர விடுவோம் என்றனர். மேலும் ஒவ்வொரு பத்திரிக்கைகளிலும் தினமும் தொடர்ந்து அரைப்பக்க மற்றும் முழுப்பக்க விளம்பரங்களை வழங்கிக்கொண்டிருந்தீர்கள். இந்த விளம்பரங்களை செய்வதற்கு உங்களிடம் பணம் இருக்கிறது ஆனால் பணியாளர்களுக்கு கொடுப்பதற்கு இல்லையா? மேலும் இந்த தூய்மை பணியாளர்களால்தான் அனைவரின் வீடும் சுத்தமாக உள்ளது. அவர்களுக்கு அதிகாரிகளால் பணம் அளிக்க முடியவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |