Categories
மாநில செய்திகள்

மக்களே வதந்திகளை பரப்பாதீர்… தமிழக அமைச்சர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை பரப்பாதீர்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள்.

அதனால் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஏற்கனவே சுகாதாரத் துறைச் செயலாளர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில், விஜயபாஸ்கர் தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

மேலும் தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளதால் 908 ஆவது நபராக நான் போட்டுக் கொண்டேன். கொரோனா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். வதந்திகளை பரப்பாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்த அவர், மாணவர்கள் மற்றும் குழந்தைகளை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்க வில்லை, பெண்களை குறைவாக பாதித்துள்ளது என தெரிவித்தார்.

Categories

Tech |