Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரியின் சர்ப்ரைஸ் விசிட்… இன்ப அதிர்ச்சியில் ரசிகர்… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி தனது ரசிகர் ஒருவர் வீட்டுக்கு சர்ப்ரைசாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் .

நடிகர் கமலஹாசன் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின்  நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றவர் ஆரி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆரிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவாகி விட்டனர் . நேர்மையோடும் ,மன உறுதியோடும் விளையாடி டைட்டிலை வென்ற ஆரிக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .

aari makes a surprise visit to fans house ரசிகரின் வீட்டிற்கே சென்ற ஆரி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஆரியை நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர் . ஆனால் ‘உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெகு விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்’  என்று ஆரி வீடியோ ஒன்றில் கூறியிருந்தார் . இந்நிலையில் ஆரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் . ஆரி தனது ரசிகரின் பிறந்த நாளுக்காக அவரது வீட்டிற்கு சென்று கேக் வெட்டி அதை ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது .

Categories

Tech |