பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெற்றிபெற்றதை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சுல்தான் ஆப் ஸ்விங் வாசிம் அக்ரம், இந்திய அணியின் தைரியத்தை பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இது மாபெரும் வெற்றி. ஆஸ்திரேலிய அணி மிகவும் கடினமானது. அதனை எதிர்த்து அங்கு சென்ற இந்திய அணி அதில் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற தைரியமிக்க அணியை நான் பார்த்ததில்லை. மேலும் இந்திய அணியை எந்த பின்னடைவினாலும் நிறுத்த முடியவில்லை. இதில் முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளனர். இது மிகவும் பிரமாதமான மீட்டெழுச்சி ஆகும். இது மற்ற வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும். Kudos இந்தியா! என்று தன் டுவிட்டர் பக்கத்தில் இந்திய அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மேலும் அஜிங்கியா ரஹானே, விராட் கோலியை போன்று மற்ற வீரர்களை பயமுறுத்துவது இல்லை. மேலும் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களை மாற்றுகிறார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன்சி வீரர்கள் அணியில் இருந்தால் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்று பல விமர்சனங்கள் உள்ளது. ஆனால் ரஹானேவிடம் இது போன்ற எந்த ஒரு தவறான அணுகுமுறைகளும் இல்லை. மேலும் ரஹானேவையே கோலி அமர வைத்தார். மேலும் தொடக்கத்தில் புஜாராவின் ஸ்கோரிங் ரேட்டை காரணம் கூறி அவரையும் ஆட விடவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவில் கடந்த முறை நடந்த போட்டியில் மூன்று சதங்களை புஜாரா விளாசினார்.
மேலும் ரிஷப் பண்ட்டை அவரின் இடம் குறித்த அச்சுறுத்தலை உருவாக்கி அவருக்கும் பின்னடைவை ஏற்படுத்தினார். மேலும் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் மற்றும் கீப்பிங் போன்றவற்றை வெளிப்படையாக கூறி ஊடகங்களில் விமர்சித்தார். இதனால் ரிஷப் பண்ட் அதிக நெருக்கடியை சந்தித்தார். இது போன்ற பல விமர்சனங்கள் விராட் கோலியின் மீது உள்ளது. எனினும் அடியெல்ட் டெஸ்ட்டிற்கு பின்பு ரகானே தான் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்த்துள்ளார். மேலும் ரவி சாஸ்திரி “நீ ஒரு மேட்ச் வின்னர்” என்று கூறி அவரை ஊக்கப்படுத்தி உள்ளார். மேலும் கேப்டன்ஷிப் திறமை வாய்ந்த வீரரான அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் டி20 இல் இருந்து படிப்படியாக கோலி வெளியேற்றினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சந்தித்து கோலி நாடு திரும்பினார். ஆனால் ரஹானே பொறுமையான விளையாட்டு நிபுணத்துவம் பெற்ற கேப்டன் என்பதை நிரூபிக்கும் வகையில் வீரர்களை ஊக்கப்படுத்தி ஆஸ்திரேலிய மண்ணில் முன்னணி வீரர்கள் இன்றி தொடரை வெல்ல காரணமாக அமைந்தார். இது மிகப்பெரிய தைரியம் என்று பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் வழக்கமாக விராட் கோலி தான் தைரியமான கேப்டன் என்று பேசப்பட்டு வந்தது. மேலும் அவர் இந்தியா திரும்பியதால் இந்திய அணி என்னவாகப் போகிறதோ? என்றெல்லாம் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கி ரஹானே, கோலியை விட தைரியமான கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.