நண்பர்களுடன் குளிக்க சென்றவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பெரிய அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கு உள்ள விவசாய கிணற்றில் பிரின்ஸ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இதனையடுத்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு அவரது நண்பர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரின் உடலை மீட்டனர். அதன்பின் கூடுவாஞ்சேரி போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.